Posts

Showing posts from November, 2017

ஐந்திணைப்பெயர் மூலம் - மருதம்

மருதம் :: மல் = வளம். "மற்றுன்றுமாமலரிட்டு" (திருக்கோ.178) மல் - மல்லல் = 1. வளம் ."மல்லல்வளனே." (தொல்.788). 2. அழகு. "மல்லற்றன்னிறமொன்றில்" (திருக்கோ.58, பேரா.) 3.பொலிவு(சூடா.). மல் - மல்லை = வளம். "மல்லைப்பழனத்து" (பதினொ. ஆளுடை. திருவுலா.8). மல் - (மர்)-மருது=ஆற்றங்கரையும்பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்கநிலத்தில் வளரும் மரம். ஒ.நோ: வெல் - வில்-(விர்) - விருது =வெற்றிச் சின்னம். "பருதி.....விருது மேற்கொண்டுலாம்வேனில்"  (கம்பரா. தாடகை.5) மருது - மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு. "அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத் துறையணி மருது தொகல்கொள வோங்கி"  (அகம். 97) "வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் பெருநல் யாணரின்"  (புறம்.52) "பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின் காமரு காஞ்சி துஞ்சும் ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே."  (புறம்.351) "மருதுயர்ந்