Posts

Showing posts from July, 2018

வேளாளர் வணிகர் அரசர் அந்தணர்/

//வேளாளர் வணிகர் அரசர் அந்தணர்// எல்லா உயிர்வாழ்க்கைக்கும்இன்றியமையாத உணவை விளைப்பதனாலும், நிலையாகக்குடியிருந்து விளைவில் ஆறிலொரு பங்கைக் கடமையாகவிறுத்து அரசை நிலைநிறுத்துவதனாலும்,போர்க்காலத்திற் படைஞனாகிப் பொருதுவெற்றியுண்டாக்கு வதனாலும், இரப்போர்க் கீந்துதுறப்போர்க்குத் துணையா யிருப்பதனாலும், எல்லாத்தொழிலாளருள்ளும், உழவனே உயர்ந்த குடிவாணனாகவும்தலைசிறந்த இல்வாழ்வானாகவும் கொள்ளப்பட்டான். கைத்தொழிலாளரெல்லாம் உழவனுக்குப்பக்கத் துணை வராகவே கருதப்பட்டனர். "உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து."  (குறள்.1032) "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்."  (குறள்.1033) "பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்."  (குறள்.1034) "இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்."  (குறள்.1035) "இல்வாழ்வான் என்பான் இயல்புடையமூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை."  (குறள்.41) "துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை