மள்ளர் மருதநில மரபு பெயர் - 1

//மள்ளர் என்பது "ஒரு சொல் இரு வினையைக் குறிக்கும் மரபுப் பெயர்" //

நாம் நம்முடைய வேலையைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கலாம் என்று நினைத்தால், பள்ளர்களின் உயர்ந்த வரலாற்றுப் பெருமை கண்டு ஆற்றாமையால் மனம் பேதலித்துப் போன, 'ஆட்டிற்கு இருக்கும் அளவே மூளை இருக்கும்' ஒரு புரட்டுக்கார பேர்வழி, நம்முடைய வரலாற்றைப் பேசுவதாக சொல்லி அடிக்கடி காமெடியாக பதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அந்த மாதிரியான பதிவுகளில் ஒன்றுதான் "தமிழ் இலக்கியத்தில் மள்ளர் மற்றும் மல்லர் என்பது பள்ளரைக் குறிக்காது" என்று சொல்லிப் பதிவிட்ட பதிவு. அதாவது, மள்ளர் என்பது பள்ளரைத் தவிர்த்து மற்றவர்களும் பயன்படுத்தக் கூடிய ஒரு பொதுச்சொல் என்று குறிப்பதுதான் இவரது பதிவின் நோக்கம். இது உண்மையா? இதைப் பார்ப்பதற்கு முன்பு 'மறவர்' என்ற சொல்லின் விளக்கம் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மறம் என்பது அறத்திற்கு எதிரான பண்பை அதாவது பாவம் மற்றும் கொடுஞ்செயலைக் குறிக்கும் சொல். இதைப்பற்றிய நிகண்டுவின் விளக்கத்தை கீழே இணைத்துள்ளேன்.

எனவே, மறத்தின் வழி வந்த மறவர் என்பது ஒரு பண்புப்பெயர். அதாவது, மறம் மிகுந்தவன் மறவன். மறம் என்பது பாவச்செயல் மற்றும் வீரத்தின் அடையாளமாகச் செய்யப்படும் கொடுஞ்செயல். எனவே, மறவர் என்பது பாலைநில வாணர், வேட்டுவர் மற்றும் போர்வீரர் ஆகியோரைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். பாலைநில வாணர் வழிப்போக்கர்களை அம்பெய்து கொன்று அவர்களின் உடைமைகளை கொள்ளையிடுவதால், அது மிகக் கொடிய பாவச்செயல் ஆகும். வேட்டுவர் என்போர் மிருகங்களை வேட்டையாடி வதை செய்வதால் அதுவும் ஒரு பாவச்செயலே. அதேபோன்று, போர்வீரர்கள் போரில் தமது பகைவர்களை வீரத்தின் வழி வதம் செய்வதால் அது ஒரு கொடுஞ்செயலாகவே கருதப்பட்டது. பாலைநில மறவர் என்பவர் ஆறலைத்தல் செய்யும் ஒரு குறிப்பிட்ட மரபினர். வேட்டுவர் என்பவர் குறிஞ்சி மற்றும் முல்லை ஆகிய இரு நிலத்து வாணர்களாகிய வேடர்கள். ஆனால், வீரர் என்ற விளக்கத்தைத் தரும் 'மறவர்' என்பது மறம் மிகுந்த 'படைஞர்' அனைவரையும் குறிக்கும் பொதுச்சொல். அவர் தெலுங்கர்படைப்பிரிவில் இருந்தாலும் சரி, முஸ்லீம் படைப் பிரிவில் இருந்தாலும் சரி, தமிழர் படைப்பிரிவில் இருந்தாலும் சரி அல்லது விஜய நகரப் பேரரசுவின் படைப்பிரிவில் இருந்தாலும் சரி எந்தப் படைபிரிவில் இருந்தாலும் அவர் எந்த குலத்தவராயினும் அவர்கள் அனைவரும் "மறவர்" என்ற பண்புப் பெயரால் சுட்டப்படுவர். அதனால்தான், இதை 'பண்புப் பெயர்' என்று பாவாணரும் தெளிவுபடுத்தியுள்ளார்(இணைப்பை பார்க்க).
இப்போது வீரர் என்ற வகையில் மள்ளர் என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், அதை மறவர் என்ற சொல்லைப் போன்றதாக நாம் கருதக் கூடாது. அது மள்ளர் என்ற 'அருந்திறல் மக்களுக்கான' ஒரு மரபுச்சொல். இதைத்தான் கீழ்கண்டபடி காலத்தால் முந்திய திவாகர மற்றும் பிங்கல நிகண்டுகள் இலக்கணப்படுத்துகின்றன(இணைப்பையும் பார்க்க).

அருந்திறல் வீரர் மற்றும் பெருந்திறல் உழவர் = மள்ளர்  (திவாகர நிகண்டு)

செருமலைவீரர், திண்ணியோர் மற்றும் மருதநில மக்கள் = மள்ளர் (பிங்கல நிகண்டு)

மேற்கண்ட நிகண்டுகளின்படி திண்மை படைத்த வீரராகிய பலம் பொருந்தியவரும், உழவருமான "அருந்திறல் மரபினர்" என்போர் 'மள்ளர்' என்று அறிதிட்டு சொல்லப்படுகிறது. இந்த மக்கள் யார் என்றால் அவர்கள்தான் 'மருதநிலத்தவர்' என்ற விளக்கமும் கொடுக்கப்படுகிறது. மருதநில மக்கள் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டால் அந்த மக்கள்தான் இந்த 'மள்ளர் என்ற மரபு' குறிப்பிடும் மக்கள் என்று தெரியவரும். நாகரிகத்தின் மேம்பட்ட வளர்ச்சியான அரசு கண்ட இந்த மருதநில மக்கள்தான் படை, வணிகம் மற்றும் காதலின்பொருட்டு பிற நிலங்கள் பரவி அந்நில மக்களையும் நல்வழிப்படுத்தி ஆளும் கிளவித் தலைவர்களாகவும் அறியப்படுபவர். அதனால்தான், மருதநிலம் தவிர்த்த பிறநிலங்களிலும் மள்ளர் என்ற அடையாளம் பெறப்படுகிறது. இதை உணராத அப்பாவிகளான பதர்கள் 'மள்ளர்' என்பது எல்லா இடத்திலும் பள்ளரைக் குறிக்காது என்று நமக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்!
அதாவது, இவர்கள் முதன்முதலில் மள்ளர் என்றால் பள்ளர் இல்லை என்று அடம் பிடித்தார்கள். ஆனால், பாவாணர் அவர்கள் 'அட முட்டாப்பயல்களா! பள்ளர் என்பது  திணைநிலங்களிலே பள்ளம் என்ற அர்த்தம் கொண்ட மருதநிலத்தில் வாழும் உழவர். அவர்களுக்கு மள்ளர் என்றும் பெயர். மள்ளர் என்பது இலக்கிய வழக்கு: பள்ளர் என்பது உலக வழக்கு' என்று சொல்லி விட்டார்(இணைப்பை பார்க்க).
To be continue..

Comments

Popular posts from this blog

மள்ளர் (Mallar) மூவேந்தர் மரபு

மள்ளர் மருதநில மரபு - 2