மள்ளர் மருதநில மரபு - 2

Part 1 continue..

அதனால் வெம்பிப் போயிருந்த இவர்கள் அடுத்த என்ன கதை சொல்லலாம் என்று பார்த்தார்கள். அதற்கு இவர்களுக்குக் கிடைத்த ஒன்றுதான் 'உழவர் என்றால் மள்ளர் என்று குறிப்பிட்ட பாவாணர் அவர்கள் அடைப்பிற்குள் 'வீரர் என்ற மள்ளர் என்பது வேறு' என்று கொடுத்த குறிப்பு. ஆம் அப்படித்தான் குறித்துள்ளார். இதை இல்லையென்று யார் சொன்னது? அப்படியெனில், வீரர் என்று அர்த்தம் தரக்கூடிய மள்ளர் என்பவர் பள்ளர் இல்லாமல் வேறு ஒருவர் என்று விளக்கம் எதுவும் கொடுத்துள்ளாரா? இல்லவே இல்லை. அவர் அப்படிச் சொன்னதன் விளக்கம்: ஏரெடுத்து நிலத்தை உழும்போது பெருந்திறல் உழவர்(மள்ளர்=உழவர்). வாளெடுத்து போரிடும் போது அருந்திறல் வீரர்(மள்ளர்=போர்மறவர், அரசர்). இதைத்தான் அவர் குறிப்பிடுவது. அதாவது, மள்ளர் என்பது 'ஒரு சொல் இரு வினையைக் குறிக்கும் மரபுப் பெயர்'(இணைப்பைக் கவனிக்க).

 இதற்கு, மேலே நான் காட்டிய நிகண்டுகளின் விளக்கமும் தெளிவாக உள்ளது. பாவாணர் உழவர் என்போர் மள்ளர் என்பதற்கும் ஆதாரம் கொடுத்துள்ளார்(இணைப்பை பார்க்க). ஆனால், வீரர் என்றவகையில் அதே உழவர் 'மள்ளர்' என்பதற்கு ஆதாரம் கொடுத்துள்ளாரா? ஆம் தெளிவான விளக்கத்துடன் கொடுத்துள்ளார். இணைப்பில் விளக்கம் உள்ளது. அதாவது, முதலில் மருதநிலத்தில் உழவர் என்பவர் மட்டுமே இருந்தனர்(இணைப்பைக் கவனிக்க).


பிறகு நாடோடிகளான கள்வர்களிடமிருந்து நிலையான குடிகளாகிய மருதநில மக்களின் உடைமைகளைக் காக்கும்பொருட்டு உழவரிலிருந்து ஊர்க்கிழவர் பிரிந்தனர். இந்த ஊர்க்கிழவனே அரசகுலத் தொடக்கம் என்றும் பாவாணர் தெளிவாக்கியுள்ளார்(இணைப்பைக் கவனிக்க). அதுமட்டுமல்லாமல், பாலை நிலத்தையும் ஒரு நிலமாக இணைத்துக்கொண்டு ஐந்து நிலங்களையும் அடக்கியாண்ட மருதநில தலைவனான 'வேந்தன்' உருவானபோதுதான் பாலைநில மறவர் காட்டுபடைப் பிரிவில் படைஞராகப் பொறுப்பேற்றனர்(இணைப்பைக் கவனிக்க). ஆனால், அரசர் குலத் தொடக்கமான 'ஊர்க்கிழவரிலிருந்து படிப்படியாக வேளிர், மன்னர், கோ அதை அடுத்த வேந்தன் நிலை வரை நாட்டுப்படை படைஞராகப் பொறுப்பு வகித்தவர்கள் உழவரான பள்ளரே(இணைப்பைக் கவனிக்க). இப்போது, உழவுத் தொழில் செய்தவர் மள்ளர் என்றால், அதே உழவர் வாளேந்தி படைஞரான போது என்ன வார்த்தையால் அழைக்கப்பட்டனர்? மறவர் என்றா? அது படைஞரான அனைவரையும் குறிக்கும் பண்புப்பெயர். ஆனால், பள்ளர் என்போர்தான் உழவர் என்ற வகையில் மள்ளர் என்ற மரபினராக இருக்கும்போது அதே உழவர் படைஞராகவும், வேளிர், மன்னர், கோ அதை அடுத்த வேந்தன் என்று மாற்றம் பெறும்போது எப்படி அழைக்கப்படுவார்கள்? மள்ளர் என்ற மரபுப் பெயரில்தானே!(இணைப்பைக் கவனிக்க) இப்போது மள்ளர் என்ற இரு வினைப் பெயரால் சுட்டப்படும் அருந்திறல் மரபினர் யார்? பள்ளர்தானே! அதனால்தான், குடும்பன் என்ற பள்ளனைப் பற்றி பாவாணர் குறிக்கும் போது குடும்பன் பள்ளர் எனும் 'மள்ளர்குலத் தலைவன்' என்று எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி 'மள்ளர்குலம்' பற்றிக் குறிப்பிட்டு தெளிவுபடுத்தி விடுகிறார்

(இணைப்பைக் கவனிக்க).

To be continue..

Comments

Popular posts from this blog

மள்ளர் மருதநில மரபு பெயர் - 1

மள்ளர் (Mallar) மூவேந்தர் மரபு