மள்ளர் மருதநில மரபு - 3

Part 2 continue..

குடும்பத் தலைவன் 'குடும்பன்'. அதன் படிநிலை வளர்ச்சியாக பல குடும்பங்கள் அடங்கிய 'குடும்பு' என்ற அமைப்பிற்குத் தலைவனானவன் ஊர்க் கிழவன் என்ற ஊர்க்குடும்பன். இந்த ஊர்க் கிழவன்தான் அரசகுலத் தொடக்கம் என்று ஏற்கனவே பாவாணரின் விளக்கம் காட்டியுள்ளேன். இதை எப்படி நம்புவது! இதையும் பாவாணர் தெளிவாக விளக்கியுள்ளார். ஆதாரம் கீழே இணைத்துள்ளேன். பார்த்துக் கொள்ளவும். ஏன் குடும்பம் என்பதும், ஊர் என்பதும் பள்ளர்கள் சம்பந்தப்பட்டது மட்டுந்தானா? மற்றவர்களுக்கு இல்லையா? திணைமயக்கம் ஏற்படுவதற்கு முன்பு வரை குடும்பம் என்ற அமைப்பும், அதனை சேர்ந்த ஊர்ப் பிரிவும் மருதநில மக்களிடத்தில் மட்டுந்தான் இருந்தது. இதற்கான பாவாணர் கொடுத்த தெளிவான ஆதாரத்தையும் கீழே இணைத்துள்ளேன். இந்த மள்ளர் என்ற சொல்லின் மறுவிளக்கம்தான் 'மல்லர்' என்பதும். 'மல்லல் வளனே' என்கிறார் தொல்காப்பியர். அது நிலவளம் என்றவகையில் வளவரான உழவரையும், உடல் வளம் என்றவகையில் வலியரான வீரரையும் குறிப்பது. இதற்கான நிகண்டு விளக்கத்தை கீழே இணைத்துள்ளேன். பாவாணர் அவர்கள் தமது சொற்பிறப்பு அகராதியில் 'மல்லர்' என்றால் வேளாண் மாந்தர் மற்றும் மற்போர் வீரர் என்று கொடுத்த விளக்கம் பற்றியும் இத்துடன் இணைத்துள்ளேன்.



 மல்லர் என்பதை மற்போர் வீரர் என்பதற்கு மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது மள்ளர்கூட்டத் தலைவனையும் குறிக்கும் சொல்லாகவும் நாம் கொள்ள வேண்டும். இதற்கு கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரங்கள் தற்காலத்தில் பல உண்டு.
இதுவரை எனது விளக்கத்தை நிகண்டுகள், அகராதி மற்றும் பாவாணரின் தெளிவான குறிப்புகள் ஆகியவை அடங்கிய 14 இணைப்புகள் மூலம் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளேன். இதற்கு மேலும் மள்ளர் என்றால் பள்ளர் மட்டும் இல்லை, அது மற்றவரையும் குறிக்கும் என்று எந்த மூடர்களாவது சொன்னால், அதன் மறைமுக விளக்கம் அவர்கள் அனைவரும் பள்ளனுக்குப் பிறந்தவர்கள் என்பதில் எந்தவித ஐயத்திற்கும் இடமில்லை என்பதே முடிவு!

Comments

Popular posts from this blog

மள்ளர் மருதநில மரபு பெயர் - 1

மள்ளர் (Mallar) மூவேந்தர் மரபு

மள்ளர் மருதநில மரபு - 2